ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டேவின் கலாட்டா காதலில் சூப்பராக ரிலீசான 100% காதல் ட்ரெய்லர்!

தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் 100%

By manikandan | Published: Sep 14, 2019 07:15 AM

தெலுங்கில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் 100% லவ். இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். தற்போது அவர் தமிழில் இப்படத்தை ரீமேக் செய்து தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு 100 % காதல் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் - ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இப்பட ட்ரைலர் நேற்று ரிலீசானது. இதில் முழுக்க முழுக்க ஜி.வி.பிரகாஷ்குமார் - ஷாலினி பாண்டே இடையையான காதல், கலாட்டா, குறும்புத்தனம் என அனைத்தும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Step2: Place in ads Display sections

unicc