மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும்

By venu | Published: Sep 16, 2019 12:39 PM

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்  ,31.12.2022 வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாகன தயாரிப்பாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மின்சார வாகனங்களின்  விலை  கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc