ஒவ்வொரு வகுப்பு முடிந்த பின்பும் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் -அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு முடிவுற்றதும் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள்

By venu | Published: Nov 14, 2019 07:50 PM

பள்ளியில் ஒவ்வொரு வகுப்பு முடிவுற்றதும் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.அப்பொழுது அவர் கூறுகையில், பாடவேளைகளின் இடைவெளியில் குடிநீர் அருந்தினால் உடல்நலம் மேம்படும் என்ற மருத்துவரின் ஆலோசனையை ஏற்று அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர்கள் குடிநீர் அருந்த 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்கு பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  
Step2: Place in ads Display sections

unicc