இழப்பீடு வழங்கவில்லை - ஒரேநாளில் 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி

இழப்பீடு வழங்கவில்லை - ஒரேநாளில் 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி

வேலூரில் இழப்பீடு வழங்காததால் 10 பேருந்துகளை ஜப்தி செய்துள்ளனர். கடந்த 1993-ஆம்  ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில்  கிரிஜாம்மாள் என்பரிடம் அரசு  போக்குவரத்து துறை 1 ஏக்கர் நிலத்தை வாங்கியது.ஆனால் இதற்கு உரிய இழப்பீட்டை போக்குவரத்துத்துறை வழங்கவில்லை.இதனைத்தொடர்ந்து கிரிஜாம்மாள் நீதிமன்றத்தை நாடினார்.இதில் இழப்பீடு தொகையாக ரூ.1.75 கோடி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு தொகையை வழங்காமல் போக்குவரத்துறை இழுத்தடித்தது.பின்பு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்தநிலையில் இன்று வேலூரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த10 பேருந்துகளை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.