ஐயப்பன் கோவிலில்10 பெண்கள் வழிபாடு…கேரள போலீஸ் கொடுத்த ரிப்போர்ட் ..!!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு சபரிமலை ஐயப்பன் கோவிலில்  10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து வயது பெண்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க. தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதையடுத்து சபரிமலையை சுற்றியுள்ள இடங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிந்து, கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். இச்சம்பவத்திற்கு பிறகு கேரளாவில்  போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர் பாஜகவினர். இதையடுத்து, சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அடுத்து சபரிமலை கோவிலில்  இதுவரை 10 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை கேரள அரசு நிறைவேற்றியது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment