அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் - முதல்வர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4

By dinesh | Published: Jul 18, 2019 08:05 PM

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் வழங்கப்படும்  என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவ நிகழ்வில் சாமியை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இன்றைய தினம் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமா கூட்ட நெரிசலில் சிக்கி இன்று மட்டும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம்  4 பேர் உயிரிழந்துள்ளனர். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சரியாக பாதிப்பு இல்லை என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில், பேரவை முடியும் நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேரது குடும்பத்திற்கும் தமிழக அரசு சார்பில் முதல்வர் பொது நிவாரணத்தில் இருந்து தலா 1 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc