பொங்கல் சிறப்பு பேருந்தில் 1.45 லட்சம் பயணிகள் பயணம்...அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்...!!

சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகை

By Dinasuvadu desk | Published: Jan 13, 2019 08:09 AM

சென்னை கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்தும் , பயணிகளின் சிரமங்கள் குறித்தும்  போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோயம்பேட்டில் ஆய்வு செய்தார் இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , சிறப்பு பேருந்து மூலமாக இதுவரை 1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணித்துள்ளனர் , பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது தொடர்பாக, இதுவரை 11 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர்களுக்கு 18 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார் .
Step2: Place in ads Display sections

unicc