லாரி ஓட்டுனருக்கு 1.41 லட்சம் அபராதம் விதித்த ட்ராபிக் போலீசார்!

ஹெல்மெட் அணியாதது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனம் சம்பந்தப்பட்ட உரிமம் இல்லாதது,

By manikandan | Published: Sep 11, 2019 05:01 PM

ஹெல்மெட் அணியாதது, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட வாகனம் சம்பந்தப்பட்ட உரிமம் இல்லாதது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, அதிக எடையை வாகனத்தில் ஏற்றுவது என சாலை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் பல மடங்கு அதிகப்படுத்தி மத்திய அரசு புதிய வாகன சட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த லாரி ஓட்டுநர் பகவான் என்பவருக்கு 1.41 லட்சம் அபராதம் விதித்து உள்ளனர் அம்மாநில போலீசார். லாரியில் குறிப்பிட்ட அளவிற்கு மேலே எடை அதிகம் கொண்ட சரக்கு ஏற்றியதால் எடைக்கு ஏற்றவாறு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
Step2: Place in ads Display sections

unicc