1 மணி நேரத்தில் 17 பேர் இந்தியாவில் விபத்தால் மட்டும் மரணம் அடைகிறார்கள்..!! அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட் .

இந்தியாவில் உள்ள சாலைகளில் மரணங்கள் சம்பவித்து தொடர் கதையாகி வருகிறது.இந்தியாவில் நாளுக்குநாள் சாலை விபத்தானது அதிகரித்து வருகின்றது.இது குறித்து பல்வேறு அமைப்புகள் ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை வெளியிடுகிறனர்.
சமயத்தில் வெளியான ஆய்வு அறிக்கையானது  அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கின்றது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மணிக்கு சராசரியாக 17 பேர் உயிரிழப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 17 பேர் சாலை விபத்தில் உயிரிழப்பதாக சமீப ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், ஒரு மணி நேரத்தில் 55 சாலை விபத்துக்கள்  இந்தியாவில் நடக்கிறது. அந்த வகையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் 1,50,785 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் உள்ளது.
அதுமட்டுமின்றி 2016-ஆம் ஆண்டில் 4,80,652 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் 2,68,341 விபத்துக்கள் அதிவேகமாக பயணம் சென்ற காரணத்தால் 29,647 விபத்துக்கள் வாகனங்களை முந்திச் செல்லும்போது ஏற்பட்டுள்ளது. 17,654 விபத்துக்கள் தவறான பாதையில் வாகனங்களை செலுத்தியதால் நடந்துள்ளது. 14,894 விபத்துக்கள் மது அருந்தி விட்டு வாகனங்கள் ஓட்டியதால் ஏற்பட்டுள்ளது. 8,513 விபத்துக்கள் சாலையில் பாதை மாறி ஓட்டியதால் நிகழ்ந்துள்ளது…
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment