ஹிருத்திக் ரோஷன் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீஸ் :

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முரளிதரன். இவர் முமபையில் தயாராகும் ஒரு வாசனை திரவியத்தை சென்னை முகவராக இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அந்த வாசனை திரவியத்தை வாங்கி விற்பனை ஆகாததால் 3 லட்சம் மதிப்புள்ள வாசனை திரவியத்தை அந்த நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.

அதற்குரிய பணத்தை அந்த நிறுவனம் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் முரளிதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கொடுங்கையூர் போலீசுக்கு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கடந்த ஜூன் மதம் கொடுங்கையூர் போலீசார் மும்பை நிறுவனத்தை சேர்ந்த சஞ்சீவி நாயர், அபிநன்மொடி, சோமாஸ் சவுத்ரி, பிசார் கைடி , ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் மீட்டு வழக்கு பதிவு செய்தது.
போலீசார் வழக்கில் சேர்ந்துள்ள ஹிருத்திக் ரோஷன் பிரபல பாலிவுட் நடிகர் என்பதும், அந்த வாசனைத் திரவிய விளம்பரத்தில் அவர் நடித்துள்ளார் ன்பதும் இப்போது தான் போலீஸூக்கெ தெரிய வந்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment