ஹார்லி டேவிட்ஸனும் எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துவிட்டது!

நாளுக்கு நாள் மக்களிடம் பெட்ரோல் டீசல் வாகனங்களை விட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை விரும்ப ஆரம்பித்து விட்டனர். பெட்ரோல் , டீசலினால் அதிக காற்று மாசு உருவாவதால், விலையும் அதிகரித்து கொண்டே போவதும் இந்த மனமாற்றத்திற்கு ஓர் காரணமாகும். இதனை வைத்து கொண்டு முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் முனைப்பில் இறங்கியுள்ளன.அந்த வரிசையில் தற்போது மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் பிரபலமான ஹார்லி டேவிட்சனும் இறங்கியுள்ளது.

ஹார்லி டேவிட்சன் தற்போது அறிமுகம் செய்யவுள்ள எலெக்ட்ரிக் வாகனத்தின் பெயர் ஐக்மா இந்த மாடல் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த மாடல் இந்தியாவிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலில் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. மேக்னட் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக இருப்பதால், க்ளட்ச் மற்றும் கியர் ஷிஃப்ட் லிவர் ஆகியவை இல்லை.

இந்த மாடலில் டிஎஃப்டி தொடுதிரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனை புளூடூத் மூலமாக தொடர்புபடுத்தும் வசதியும் இருக்கும். நேவிகேஷன் மற்றும் மியூசிக் சிஸ்டம் என சகல வசதியும் உள்ளது. ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் மின்சார மோட்டார்சைக்கிளின் முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு, முன்பதிவும் துவங்கப்பட இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம்.

DINASUVADU

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment