வெளியானது 2.0 படத்தின் பிரமாண்ட டீசர் …!கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் ..!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’ கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அகபஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திரையிட முடியவில்லை. கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி நடந்து கொண்டு இருக்கிறது.

 

இந்நிலையில் ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர் இன்று  காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில்  ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Leave a Comment