வெயில் வந்தாச்சு, இனிமேல் இந்த பழத்தை சாப்பிடுங்க

பருவகால மாற்றம் என்பது இயற்கையான ஒன்று தான். மக்கள் குளிர்கால மாற்றங்களை கூட தாங்கி கொள்கிறார்கள். ஆனால், வெயில் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை மக்களால் தாங்கி கொள்ள முடிவதில்லை.

வெயில் காலம் தொடங்கி விட்டாலே பல நோய்கள் நம்மை தேடி வருகின்றன. இந்த நோய்களால் நமக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே, வெயிலை தாங்கிக்கொள்ள கூடிய சக்தி உடலில் இல்லாதது தான்.

லிச்சி பழம்

கோடை காலத்தில் நாம் அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். அந்த வகையில் கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்த பழமாக லிச்சி பழம் உள்ளது.

Image result for லிச்சி பழம்

பிங்க் நிறத் தோல் கொண்டு முட்டை வடிவில் இருக்கும் இப்பழம், பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. லிச்சி பழத்தில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

வயிற்று பிரச்சனைகள்

Image result for வயிற்று பிரச்சனைகள்

கோடை காலங்களில் உடல் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், அவ்வெப்பத்தை தனிப்பதில் இது முக்கிய அங்கு வகிக்கிறது. உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் வயிற்று கோளாறுகளையும் இது போக்குகிறது.

உடல் எடை

Related image

லிச்சி பழம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

புற்று நோய்

Image result for புற்று நோய்

லிச்சி  ஆண்டி – ஆக்சிடென்டுகள் காணப்படுகிறது. புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளதால், இதனை உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

இதய நோய்

Image result for இதய நோய்

இதய நோய் உள்ளவர்களுக்கு லிச்சி பழம் ஒரு சிறந்த பலமாக திகழ்கிறது. லிச்சி பழத்தை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறையும். இதற்கு அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

கண் பார்வை

Image result for கண் பார்வை

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் லிச்சி பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. லிச்சி பழத்தில் உள்ள பைட்டோ-கெமிக்கல்கள், செல்களின் அசாதாரண வளர்ச்சியைத் தடுப்பதோடு, கண் புரை ஏற்படுவதையும் தடுக்கிறது.

இரத்தம்

Image result for இரத்தம்

இந்த பழம் இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கிறது. இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. எனவே இது, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும். இதன் காரணமாக இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரித்து, இரத்த சோகை போன்ற நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment