"வீடுகளை சீரமைக்க வட்டி இல்லா கடன் " – கேரள முதல்வர் அறிவிப்பு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலத்தில் வரலாறு காணாத மலை காரணமாக வெள்ள பேருக்கு ஏற்பட்டது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் மக்கள் பலர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலையின் தாக்கம் குறைந்த பின்னர் வெள்ளம் குறைய ஆரம்பித்தது. இதன் பின்னர் மக்கள் முகாம்களில் இருந்து தங்களின் வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், பெரும்பாலான வீடுகள் மலை வெள்ளத்தால், செர் மாரு சகதியினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் நேற்று நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க ரூபாய் ஒரு லட்சம் வரை வட்டி இல்ல கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன் வட்டி தொகையை அரசே செலுத்து” என்கிறார்.
அதே போன்று நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளுக்கு செல்பவர்களின் வாங்கி கணக்கில் தலா 10,000 ரூபாய் செலுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அரசு சார்பில் நடக்கும் ஓணம் பண்டிகையை ரத்து செய்திருந்தது. இந்நிலையில் ” லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஒன, பண்டிகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து கொண்டாடுவோம்” என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment