விருந்து வைத்த விஸ்வாசம்..!கொண்டாட்டத்தில் குதிக்கும் ரசிகர்கள்..!!!மொத்த பாடல் வெளியீடு.!

விருந்து வைத்த விஸ்வாசம்..!கொண்டாட்டத்தில் குதிக்கும் ரசிகர்கள்..!!!மொத்த பாடல் வெளியீடு.!

நடிகர் அஜித்துடன் இயக்குநர் சிவா  வீரம், விவேகம், வேதாளம் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது உருவாகியிருக்கும் படம் விஸ்வாசம்.படத்தில் நடிகை நயன்தாரா ஹூரோயினியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் அஜித் தூக்குத்துரை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை நயந்தாரா நிரஞ்சனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தினை சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற நிலையில் அஜித் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கிறார் டி.இமான்.இவர் இசையமைத்த இரண்டு பாடல்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் கொடுத்த படக்குழு  இன்று விஸ்வாச படத்தின் பாடல்கள் அடங்கிய முழு ஆல்பமும் இன்று மாலை 6.01 க்கு என்று வெளியாகும் என்று அறிவித்த நிலையில் தற்போது மொத்த பாடல் அடங்கிய ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதிக்கின்றனர்.

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *