வினுவின் இறுதிச்சடங்கில் மிகவும் வருத்ததுடன் தாயார் மேரியம்மா.

கேரளா: 25 வயதான வினுவின் மரணம் அனைவரயும் அதிர வைத்துள்ளது. இவர் பயணம் செய்வதில் மிகுந்த பிரியம் கொண்ட, வினு லிம்கா சாதனையாளர். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3,888 கிலோ மீட்டர் தூரத்தை காரில், 57 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்தவர். 13 மாநிலங்களைக் கடந்து இரண்டரை நாள்களில் லிம்கா சாதனைக்குச் சொந்தக்காரராகியிருந்த வினு, இளம் வயதிலேயே மரணம் அடைவார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். டிசம்பர் 5-ம் தேதியன்று செங்கானுரில் டூவீலரில் வந்துகொண்டிருந்த, வினு மீது, சுற்றுலா வாகனம் மோதியதால்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார் .                                     வினுவின் தந்தை ஜாக்கப் குரியன் பிசினஸ்மேன் மற்றும் தாயார் மேரியம்மா ஆசிரியை. வினுவின் உடலைப் பார்த்து மேரியம்மா ஒரு சொட்டு கண்ணீர்கூட சிந்தவில்லை. வினுவின் இறுதிச்சடங்கின்போது, 13 நிமிடங்கள் மேரியம்மா மிகவும் சோகத்துடன்  உடைந்த குரலுடன் பேசினார். அந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக்கில் வைரலாகியிருக்கிறது. 5 லட்சம் பேர் அதைப் பார்த்துள்ளனர். 5,300 பேர் ஷேர் செய்திருந்தனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment