விடுமுறை கேட்டு கலவரம் செய்த போலீஸ்…நிரந்தர விடுமுறை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது அரசு..!!

பீகாரில் விடுமுறை கொடுக்காததால் உடல்நலமற்ற பெண் காவலர் இறந்ததாக பீகாரில் கலவரத்தில் ஈடுபட்ட 175 போலீசார் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் காய்ச்சல் காரணமாக பயிற்சி பெண் போலீஸ் சவிதா பதக் (22 வயது) என்ற பெண் போலீஸ்  கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். உயரதிகாரிகள் லீவு கொடுக்காததே காரணமென கூறி காவலர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.  உயர் அதிகாரிகளின்  வாகனங்களை , காவலர்கள் அடித்து நொறுக்கினர். பூந்தொட்டிகளை தூக்கி உடைத்தனர்.
மேலும், தங்களிடம் உள்ள தடியை கொண்டு மூத்த அதிகாரிகளை காவலர்கள் சரமாரியாக தாக்கினர் இதனால், அங்கு பயங்கரமான கை கலப்பு ஏற்பட்டது. உயரதிகாரிகள் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.  மருத்துவமனையிலேயே உயரதிகாரியை அடித்துத் உதைத்த சக காவலர்கள், அவரை வீடு வரை விரட்டியடித்தனர்.
கான்ஸ்டபிள்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. ஊடகங்களைச் சேர்ந்த சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 300-க்கும் அதிகமான காவலர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர்.   நிலைமை கட்டுக்குள் வர பல மணி நேரம் ஆனது.
இதனையடுத்து, கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி கூறியிருந்தார்.போலீஸ் உயர் அதிகாரிகள் மீதே காவலர்கள் வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்தநிலையில்,  உயரதிகாரி அளித்த புகாரை அடுத்து, 175 காவலர்கள் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண் காவலர்கள் ஆவார். தலைமைக் காவலர்கள் சிலரும் கலவரத்தில் ஈடுபட்டதாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
dinasuvadu.com 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment