#விஜய் 63 படத்தின் போஸ்டர் டிசைனர் யார் தெரியுமா…?

நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள புதிய படம் விளையாட்டை மையப்படுத்திய கதை அமைகிறது.
இந்நிலையில் கண்டிப்பாக இந்த கதையை அட்லீ ஸ்கோர் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் படு  வேகமாக நடந்து வருகிறது.
இது விஜய்க்கு 63வது படமாகும் இந்த படத்தின் போஸ்டர் டிசைனர் யார் என்று ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் வெளியாகியுள்ளது. அது வேறுயாரும் இல்லை கோபி பிரசன்னா தான் இந்த படத்திற்கும் போஸ்டர் டிசைனராம். இவர் ஏற்கனவே  விஜய்யின் கத்தி, தெறி, மெர்சல் தற்போது சர்கார் ஆகிய படங்களுக்கு டிசைன் செய்துள்ளார்.இவரே இந்த படத்திலும் இணைந்துள்ளார்.மேலும் இப்படத்தின் மூலம் விஜய் படத்திற்க்கு 5வது முறையாக  பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

author avatar
kavitha

Leave a Comment