விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் 'டப்மேஷ்' புகழ் மிருணாளினி

டப்மேஷ் மூலம் பிரபலமடைந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் மிருணளினி ரவி. இவரது டப்மேஷ்க்கு பல ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது நகல் எனும் படத்தில்  ஹீரோயினாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திற்கு பிறகு 6 வருடங்கள் கழித்து தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘சூப்பர் டீலக்ஸ்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகிய முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் டப்மேஷ் நாயகி மிருனாளினி ரவியும் உடன் நடிக்கிறார். இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த படத்தில் பி.சி.ஸ்ரீராம் ஒளிபதிவு செய்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடிக்கிறார் இவரது தோற்றம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment