விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன் ஆஜர்! ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை ….

விசாரணை ஆணையத்தில் சுதா சேஷய்யன் ஆஜர்! ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை ….

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிச.5 அன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், விசாரணை ஆணையத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் இன்று (புதன்கிழமை) நேரில் ஆஜரானார்.
ஜெயலலிதா உடல் பதப்படுத்தப்பட்டது குறித்து பல மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களுக்கு மருத்துவர் சுதா அளித்த பேட்டியில், “ஜெயலலிதா மரணமடைந்த பிறகு அவரது உடல் பதப்படுத்தப்பட்டது. டிசம்பர் 5ம் தேதி இரவு 12.20 மணியளவில் அவரது உடல் பதப்படுத்தப்பட்டது. மக்கள் அஞ்சலிக்காகவே அவரது உடல் பதப்படுத்தப்பட்டது எனவும் மருத்துவர் சுதா தெரிவித்தார். மேலும் உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் அவருக்குள் செலுத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்” என்பது கவனிக்கத்தக்கது.
இதேபோல், அப்போலோ மருத்துவமனை டாக்டர் சத்யபாமா 4-ம் தேதியும் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
source: dinasuvadu.com

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *