வரலாற்றில் இன்றுதான் உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

• வரலாற்றில் இன்று – உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது – 1971- ஜனவரி 5 – கிரிக்கெட் தொடர்பான பல திருப்புமுனைகள் ஆஸ்தி ரேலிய மண்ணில் நடந்திருக் கின்றன.
• ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ஆஸ்திரேலியாவில்தான்.
• ஆனால் இந்தத் திருப்புமுனை தற்செயலாக நடைபெற்ற ஒன்று என்றால் வியப்பு ஏற்படலாம்.
• இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 1971-ல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் மைதானத்தில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. டெஸ்ட் மேட்ச்தான்.
• ஆனால் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு போட்டி நடைபெற வில்லை. காரணம் மழை கொட் டித் தீர்த்தது. ‘‘இனி இந்தப் போட்டி நடக்காது’’ என்று அமைப்பாளர்கள் அறிவித்தனர். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றம் அளவு கடந்ததாக இருந்தது. சும்மா பேருக்கு ஒரே நாளில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தலாமா என்று யோசித்தார்கள். நாலாவது நாள் நல்லவேளையாக வருண பகவான் பார்வையாளராக வரவில்லை.
• 1971 ஜனவரி 5 அன்று நடந்தது அந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி! ஒவ்வொரு அணி யும் 40 ஓவர்கள் பந்து வீசின. முதலில் பேட்டிங் செய்த இல்லிங்க்ஸ் வொர்த் தலைமையிலான இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த பில் லாரி தலைமயிலான ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 191 ரன்களெடுத்தது விளையாட்டை வென்றது. பார்வையாளர்களுக்குப் பேரானந்தம். அதன் பிறகு இந்த ஒரு நாள் விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC யால் நெறிப்படுத்தப்பட்டு எல்லா நாடுகளுக் கிடையிலும் விளையாடப்பட்டது. எனினும் இந்த விளையாட்டுதான் உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்று குறிப்பிடப்படுகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment