வரம் தர வரும் கந்தசஷ்டி……..அரோகரா கோஷத்துடன்…..படைவீடான பழனியில் தொடங்குகிறது…!!!

வரம் தர வரும் கந்தசஷ்டி……..அரோகரா கோஷத்துடன்…..படைவீடான பழனியில் தொடங்குகிறது…!!!

தமிழ்கடவுளான எம்மிரான் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்படும்.
Related image
 
இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற நவ.8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.7 நாட்கள் விரதத்தோடு நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர்  சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு தயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் புரியும் அப்பன் முருகனின் சூரசம்ஹாரம் நடக்கிறது.
Image result for பழனி சூரசம்ஹாரம்
 
அன்றைய தினத்தில் மதியம் 3 மணிக்கு மேல் மலைக்கொழுந்து அம்மனின் விசேஷ பூஜைக்கு பின்பு வேல் வாங்கும் அற்புத நிகழ்ச்சியும் பின்னர் சின்னக்குமாரர், வில் அம்பு, கேடயம், குத்தீட்டிகலுடனும் அயுதங்களுடன் வீரபாகு நவவீரர்களுடன் சேர்ந்து போருக்கு புறப்படும் கண்கொள்ள காட்சியின் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மலைக்கோவிலில் நடை அடைக்கப்பட்டு. தொடர்ந்து சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி அங்குள்ள பாதவிநாயகர் கோவில் வந்து அடைதல் நிகழ்ச்சி நடைபெறும்.
Related image
பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி , தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் ஒய்யாரமாக அழகு ததும்ப பாதவிநாயகர் கோவிலை வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் அமைந்துள்ள குழந்தை வேலாயுத சுவாமியிடம் சக்திவேலை வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.அதன் பின்னர் சக்திவேல் பாதவிநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு பெரிய தங்கத்திலான மயில் வாகனத்தில் எழுந்தருளி காட்சி தரும் சின்னக்குமாரரிடம் வைலை வைத்து தீபாராதனை நடத்தப்பட்டு அவரை போருக்கு புறப்படும் நிகழ்ச்சி உணர்ச்சி பொங்க நடைபெறும்.
Image result for பழனி சூரசம்ஹாரம்போரின் முக்கிய நிகழ்வான சம்ஹாரம் மாலை 6 மணிக்கு பழனி மலையின் மேல் அடிவாரம் வடக்கு கிரிவீதியில் அசுரன் யானைமுக சூரன் வதமும் அதனை தொட்ர்ந்து கிழக்கு கிரிவீதியில் அசுரன் பானுகோப சூரன் வதமும் மற்றும் தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும் மேலும்ம் மேற்கு கிரிவீதியில் நிகழ்வின் வில்லானாக கருதப்படும் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.நான்கு திசைகளிலும் அப்பன் முருகன் ஆனந்த நாடனமாடி கொண்டபடியே அசுரர்களை வதம் செய்கிறார்.
Image result for பழனி சூரசம்ஹாரம்
மேலும் முத்துக்குமாரசுவாமி  தயார் வள்ளி-தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளிகிறார் இதனிடையே சின்னக்குமாரர் சந்திப்பும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆரியர் மண்டபத்தில் சம்ஹார வெற்றி விழாவும் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலின் சம்ரோஜனை பூஜைக்கு பின்பு ராக்கால பூஜையும் நடைபெறும்.இந்த விழாவின் 7-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி போரை முடித்த முருகனுக்கு வெற்றியின் பரிசாக காலை 9 மணிக்கு மேல் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இந்த விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவிலின் இணை ஆனையர் செல்வராஜ் மற்றும் துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
Image result for சஷ்டி  விரதம் பெண்கள்
சஷ்டியில் விரதமிருந்தால் குழந்தை பேறு நிச்சயம் என்பதை சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்கிறது பழமொழி என்ன அது சஷ்டி இல்லை சட்டி அப்படித்தானே சஷ்டி என்பது தான் திரிந்து சட்டி என்று காலப்போக்கில் மாறிவிட்டதாம்.
மேலும் ஆன்மீக தகவலுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்

author avatar
kavitha
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *