வடமாநிலங்களை வாட்டும் கடும் குளிர், பனிப்பொழிவு- உத்தரபிரதேசத்தில் 70 பேர் பலி

 
வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் தங்குவதற்கு போதுமான இடவசதி இன்றி உத்தரபிரதேசத்தில் மட்டும் கடும் குளிருக்கு 70 பேர் பலியாகி உள்ளனர்.ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் 2.1 டிகிரி செல்சியஸ் வரையிலும் தரைப்பகுதிகளில் 5 டிகிரி வரையிலும் குளிர் நிலவுகிறது. இது மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அடர்ந்த பனி காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காற்று வீசுகிறது.இந்நிலையில், தங்குவதற்கு வீடுகள் இன்றி வெட்டவெளியிலும் சாலை ஓரங்களிலும் தங்கும் ஏழைகளின் நிலை மிகவும் மோசமாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் குளிரால் உயிரிழக்கும் நிலையை தடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பலனில்லை. இந்த ஆண்டு கடும் குளிருக்கு உத்தரபிரதேசத்தில் மட்டும் இதுவரை சுமார் 70 பேர் பலியாகி உள்ளனர். மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் மிக அதிகமாக 22 பேர் பலியாயினர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment