வடசென்னை படம் இவ்வளவு நேரம் ஓடுமா..!!

வடசென்னை படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தைத் தொடர்ந்து வடசென்னை படம் உருவாகியுள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு, வடசென்னையை கதைக்களமாக வைத்து, கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்தப் படம் தணிக்கைக் குழுவில் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இதற்கான காரணத்தை நடிகர் தனுஷ் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில், இந்தப் படத்தின் ஆக்ரோஷமான காட்சிகளை அப்படியே கொடுக்க விரும்பியதாலும், படத்தின் தீவிரம் குறையாதவாறு இருக்க விரும்பினோம். அதனால் எவ்வித சென்சார் கட்களும் இன்றி ‘ஏ’ சான்றிதழுடன் அக்டோபர் 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது” என்று கூறியிருந்தார்
இதையடுத்து இந்தப் படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்தப் படம் 166 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 46 நிமிடங்கள் திரையில் ஓடும். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் விறுவிறுப்பாக இருக்கும் பட்சத்தில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment