வங்கதேசத்தில் தொடரும் கனமழை.! 30,000 வீடுகள் இழப்பு.! 9000 பேர் பாதிப்பு.! தவிக்கும் ரோஹிங்கியா அகதிகள்..!

மியான்மர் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சனையில் ரோஹிங்கியா என்ற இஸ்லாமிய இன மக்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். பெரும்பாலான அகதிகள் வங்கதேசத்திற்கு சென்றனர். சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக வங்கதேசம் நாட்டில் குடியேறி உள்ளனர்.

இந்நிலையில், வங்கதேசத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ரோஹிங்கியா அகதிகள் அதிகம் வாழும் பகுதியான தென்கிழக்கு வங்கதேசத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதனால் ரோஹிங்கியா மக்கள் வாழ்ந்து வந்த சுமார் 30 ஆயிரம் கூடாரங்கள் வெள்ளத்தாலும், மண் சரிவினாலும் அழிக்கப்பட்டன.  9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை தொடர்ந்து நீடித்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment