லோக்அயுக்தா தமிழகத்தில் இன்னும் ஏன் நியமிக்கப்படவில்லை?

லோக்அயுக்தா தமிழகத்தில் இன்னும் ஏன் நியமிக்கப்படவில்லை?

உச்சநீதிமன்றம்,ஊழல் தடுப்பு மற்றும் விசாரணை அமைப்பான லோக்அயுக்தா இன்னும் ஏன் ஏற்படுத்தப்படவில்லை என 2 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

லோக்பால் மற்றும் லோக்அயுக்தாக்கள் சட்டம், கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மத்தியில் லோக்பால் அமைப்பும், மாநிலங்கள் அளவில் லோக்அயுக்தா அமைப்பும் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் சட்டம் நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், மத்தியில் இன்னும் லோக்பால் அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதேபோல தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் லோக்அயுக்தா அமைப்பை இன்னும் ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில், லோக்அயுக்தாவை ஏன் நியமிக்கவில்லை என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் 2 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, விளக்கம் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல மேற்குவங்கம், ஜம்மு-காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் 2 வாரங்களில் லோக்அயுக்தா குறித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *