லெனோவோ எஸ்5(Lenovo S5) நாளை அறிமுகம்.!

லெனோவோ எஸ்5(Lenovo S5) நாளை அறிமுகம்.!

 

இப்போது வெளிவரும் ஸ்மார்ட்போன் மாடல்களில் செயற்கை நுண்ணறிவு அம்சம் கண்டிப்பாக இடம்பெறுகிறது, அந்த வரிசையில் லெனோவோ எஸ்5 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் மார்ச் 20 ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த எஸ்5 ஸ்மார்ட்போனின் டீஸர் ஒன்று வெளியானது, மேலும் லெனோவோ எஸ்5 ஸ்மாரட்போனில் அண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட ZUI 3.5 ஒஎஸ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஒஎஸ் இயங்குதளம் போன்று பல்வேறு மேம்பாடுகளை கொண்டுள்ளது இந்த ZUI 3.5 ஒஎஸ். லெனோவோ எஸ்5 பொறுத்தவரை 5.65-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2160 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இக்கருவி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா மற்றும் டூயல் ரியர் கேமரா அமைப்பு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. அதன்பின்பு 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

 

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *