ரூ 73,75,00,69,25,00,000 சுருட்டல்…ஆங்கிலேயரின் திருட்டு அம்பலம்…!!

இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த  173 ஆண்டுகளில் 9.2 டிரில்லியன் யூரோ மதிப்பிற்கு சுரண்டி சென்றதாக இந்திய பொருளாதார வல்லுநர்  உஸ்தா பட்நாயக் தனது ஆய்வதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய சுதந்திர போராட்டத்தில் இந்தியா ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டி சுதந்திரம் பெற்ற போது,ஆங்கிலேயர் காலத்தில்  இந்தியாவில் வாழ்ந்த மக்களுடைய நிலை, வர்தா, கஜா புயல்களால் ஏற்பட்ட பாதிப்பை விட பல ஆயிரம் மடங்கு அதிகம் என்று நம்முடைய பொருளாதார வல்லுநர்கள் கணக்கிட்டுள்ளனர்.இந்திய பொருளாதார வல்லுநரான உஸ்தா பட்நாயக்  தனது ஆய்வறிக்கை சமீபத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வெளியாகியது.இதில் அவர் தெரிவித்த மதிப்பானது இந்தியாவை மிரள வைத்துள்ளது.
ஆங்கிலேயரின் ஆட்சி காலகட்டத்தில் நடைபெற்ற நிதிப் பரிவர்த்தனை குறித்து, மிக தெளிவான ஆராய்ச்சியை  உஸ்தா பட்நாயக்  மேற்கொண்டுள்ளார்.  இந்த காலத்தில் இந்தியாவில் கடுமையான வறுமை,  பஞ்சம் நிலவிய போதும் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி ஆங்கிலேயர் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். இப்படி 173 ஆண்டுகளாக இந்தியாவின் வளங்களைச் சூறையாடியத்தை உஸ்தா பட்நாயக்  தனது ஆய்வறிக்கை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர்கள் 173 ஆண்டுகளாக இந்தியாவின் வளங்களைச் சூறையாடியதன் ஒட்டு மொத்த இன்றைய மதிப்பு ரூ  73,75,00,69,25,00,000 ( 9.2 டிரில்லியன்யூரோ) என்று தமது அறிக்கையில் உஸ்தா பட்நாயக் தெளிவாக ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டியுள்ளார்.  இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை, பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் தற்போதுள்ள ஒட்டுமொத்த சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும் என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தாக்கல் செய்த தமது ஆராய்ச்சிக் கட்டுரையில் உஸ்தா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment