ரூ.115 கோடி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தொகுப்பு திட்டம்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.115 கோடியில் குறுவை தொகுப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக, 115 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், குறுவை நெல் மற்றும் பயிறு சாகுபடி மேற்கொண்டு, உயர் மகசூல் பெறவும், மண் வளம் மேம்படவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை உடனடியாக துவக்குவதற்கு துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு குறுவை சாகுபடியினை சிறந்த முறையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை பெறுவதற்கு இந்த அரசு துரித தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதையும், விரைவில் காவிரி நீர் மூலம் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment