ராயலாக சாலையில் செல்ல வருகிறது புதிய வடிவில் ஹிமாலயன் ராயல் என்பீல்டு…!!!

  • ராயலாக வலம் வர பயன்படுத்தும் ராயல் என்பீல்டு ரக பைக்குகளுக்கு என்றுமே தனி இடம் தான்.
  • தற்போது புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது ராயல் என்பீல்டு நிறுவனம்.

இப்போது ராயல் என்பீல்டு பைக்கின் புதிய மாடலாக ஹிமாலையன் பைக் என்ற பெயரில் வரும் ஜனவரி மாதம் சந்தைகளில் விற்பனைக்கு  வருகிறது. இந்த பைக்கில் 411 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 24.5 பி எச் பி பவரையும்,32 என் எம் டார்க் திறனையும் இந்த வாகனம் பெற்றுள்ளது. இந்த பைக்கில் இன்ஜின் பி எஸ்-6 மாசுக்கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த பைக்கில் டிஸ்க் பிரேக்குடன் டியூவல் சேனல் ஏபி எஸ் பிரேக்கிங் சிஸ்டம்,இண்டிகேட்டருக்கான ஹசார்டு சுவிட்சு வசதி போன்றவை இந்த ஹிமாலயன் மாடலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.இந்த் புதிய மடல் பைக்கின் விலை ரூ.1.90 இலட்சம் என எதிர்பார்க்கலாம்.

author avatar
Kaliraj