ராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல்வர்கள் பதவியேற்பு விழா…!! காங்.தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு..!!

5 மாநில தேர்தலில் ஆளுகின்ற பாஜகவை வீழ்த்தி ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்கு யார் முதல்வர் என்ற அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர்ந்த காங்கிரஸ் தற்போது அந்த இரு மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.
இந்த பதவியேற்பு விழா  டிச.17ம் தேதி நடைபெற உள்ளது.இந்த விழாவில் ராகுல் காந்தி காலை 10 மணிக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியேற்பு விழாவில் பநேற்கிறார் என்றும் பிற்பகல் 1.30 மணிக்கு மத்திய பிரதேச மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha

Leave a Comment