ரஷ்யாவே சைபர் தாக்குதல் பாதிப்புகளுக்கு காரணம்!

பிரிட்டன் சைபர் தாக்குதலால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரஷ்யாவே காரணம் என  குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உக்ரைனில் உள்ள நிதி, மின்சாரம், மற்றும் அரசுத் துறைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதலால் ஐரோப்பிய நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. இதனால், வர்த்தக நிறுவனங்களுக்கு சுமார் 120 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என பிரிட்டன் சாடியுள்ள நிலையில், அதை ரஷ்யா மறுத்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment