ரஜினி அரசியல் : ஆதரவும், விமர்சனமும்

ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தாலும் அறிவித்தார், பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் இன்னும் பலருடைய கருத்துக்கள்,

நடிகர் விவேக் : ரஜினி அரசியலுக்கு வருவதை அறிவித்து ஆனந்த அதிர்ச்சியை அறிவித்து விட்டார். இனி அதிலிருந்து பின் வாங்க கூடாது.

இ.கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : தற்போது உள்ள ஆட்சி பற்றி கூறியிருப்பது வரவேக்க்க தக்கது.

தமிழிசை : துணிச்சலுடன் அரசியலுக்கு வருவேன் என அறிவித்து இருப்பது வரவேக்க தக்கது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

தொல் திருமாவளவன் : ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். மதவாத அரசியலை முன்னெடுக்காமல், ஆன்மீக அரசியலை முன்னெடுத்தல் வரவேற்க தக்கது.

சுப்பிரமணியன் சுவாமி : தமிழ்மக்கள் புத்திசாலிகள். அரசியல்  குறித்து அவர் கூறும் கருத்தில் தெளிவில்லை எனவும் கூறினார்.

வேல்முருகன் : தமிழகத்தில் நடந்த பல்வேறு பிரச்சனைகள் வந்தபோது மௌனம் காத்தவர் ரஜினிகாந்த். இதுவரை எந்த ஒரு பிரச்சனைகளிலும் மத்திய மாநில அரசுகளை விமர்சிக்காதவர்

இவ்வாறு பலர் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment