ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காலா’. ‘காலா’ படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ‘2.0’ படத்தின் வெளியீடு தள்ளிப்போவதால் ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் தடை ஏற்பட்டது. இதற்கிடையே பட அதிபர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. புதிய படங்கள் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்றும், சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார். இந்நிலையில்
ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. “காலா” திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து உள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *