ம.பி. சட்டப்பேரவை தேர்தல்: சிறிய கட்சிகளிடம் ஆதரவு கேட்பதில் காங்கிரஸ், பாஜக தீவிரம்

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் – பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் சம நிலையில் உள்ளதால், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 13 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வந்த மத்திய பிரதேசத்தில், தற்போது காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் சமநிலையில் உள்ளன. அதே நேரம் பகுஜன் சமாஜ் கட்சி 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசை ஆதரிக்கும் என கூறப்படுகிறது. அதே நேரம் இரு கட்சிகளும் சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment