மேகாலயாவில் காங்கிரஸ் வெற்றி ! தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததால் ஆட்சி அமைக்க திட்டம்..!

மேகாலயாவில் அம்பதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் முகுல் சங்மாவின் மூத்த மகளும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான மியானி தல்போத் ஷிரா வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் மேகாலயாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 20 இடங்கள் கிடைத்தது. பாஜகவுக்கு 2இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் 7 எம்எல்ஏக்கள், மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் 4 எம்எல்ஏக்கள் ஆகியோரின் ஆதருவடன் கான்ராட் சங்மா முதல்வராகப் பதவி ஏற்றார்.

காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், முகுல் சங்மா தனது எம்எல்ஏ பதவியை மார்ச் மாதம் ராஜினாமா செய்ததையடுத்து, அம்பதி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடந்தது.

இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் முகுல் சங்மாவின் மூத்த மகள் மைனி தல்போத் ஷிரா போட்டியிட்டார். ஆளும் பாஜக,தேசிய மக்கள் கூட்டணி சார்பில் மோமென்ட் கிளமின் போட்டியிட்டார்.

வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகளைத் தலைமை தேர்தல் அதிகாரி பிரட்ரிக் ராய் கார்கோங்கர் அறிவித்தார். இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மைனி தல்போத் ஷிரா 14,259 வாக்குகள் பெற்று, 3,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக, ஆளும் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் கிளமென்ட் மோமின் 11,068 வாக்குகள் மட்டுமே பெற்றார். சுயேட்சை வேட்பாளர் சுபான்கர் கோச் 360 வாக்குகள் பெற்றார்.

இதையடுத்து, மேகாலயா மாநிலத்தில் 21 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால், சமீபத்தில் கர்நாடகத்தில் தனிப்பெரும் கட்சியாக இருந்தபாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார்.

அதனால், கர்நாடகாவில் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தது போல் மேகாலயா ஆளுநர் தனிப்பெரும் கட்சியான காங்கிரஸ் கட்சியையும் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment