முள்ளங்கியின் மருத்துவ குணங்கள்..,

முள்ளங்கி எப்போதும், எங்கும் மிக எளிதாக கிடைக்க கூடியது. அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறி ஆகும். விலையும் மலிவாக கிடைக்கும். இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் அதிகமாக உள்ளது. எனவே உணவாக மட்டுமின்றி முள்ளங்கி மருந்தாகவும் பயன்படுதலாம். இதில் உள்ளசத்துக்கள் ஆண்களின் உயிரணுக்களை அதிகரிக்க செய்கிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி மஞ்சள் காமாலை வராமலும், புற்றுநோய் வராமலும் தடுக்கிறது.

வைட்டமின் சி முள்ளங்கியில்  அதிகமாக உள்ளது. முள்ளங்கி மட்டுமல்லாமல் அதன்  இலைகளும் மருத்துவ மகத்துவம் கொண்டது. கல்லீரலை பாதுகாக்கிறது. தொடர்ந்து பயன்படுத்தும் போது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கின்றது. மஞ்சள்காமாலையில் இருந்து முள்ளங்கி பாதுகாப்பு அளிகின்றது. சமையலில் சேர்த்தும் இதனை எடுத்துக்கொள்ளலாம். முதலில் முள்ளங்கியை பயன்படுத்தி பசியைத்தூண்டும் மருத்துவம் குறித்து அறிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி, சீரகம், மஞ்சள். செய்முறை: முள்ளங்கியை சுத்தம் செய்து அதை விழுதாக அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். ெகாதிக்கும் அந்த நீரில் அரைத்த முள்ளங்கி விழுது சேர்த்து கொதிக்கவிடவும். அதனுடன் சீரகம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி குடித்து வர உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். நச்சுக்களை வெளியேற்றி ஈரலை பலப்படுத்தும். பசியை தூண்டும். ரத்தம் மற்றும் ஜீரணப்பாதையை சுத்தப்படுத்துகிறது.

மலச்சிக்கலை போக்குகிறது. மஞ்சள் காமாலை வராமல் பாதுகாக்கிறது. முள்ளங்கியை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னைகளுக்கு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முள்ளங்கி விதை(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்), கருஞ்சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: முள்ளங்கி விதைப்பொடி ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரகம், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர் விட்டு கொதிக்க விடவும். அதை வடிகட்டி உணவுக்கு முன்பு இரு வேளை தொடர்ந்து குடித்துவர பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகள் சீராக்கி முறைப்படுத்தும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment