மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்துள்ளது!!!

மும்பை : இன்று காலையிலேயே  சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 396.36 புள்ளிகள் உயர்ந்து 33,503.18 புள்ளிகளாக இருந்தது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117.10 புள்ளிகள் அதிகரித்து 10,331.90 புள்ளிகளாக இருந்தது.

மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பீடுகளை Baa 2 விலிருந்து Baa 3க்கு மேம்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை, சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணபடுகின்றன, மேலும் இன்போசிஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, விப்ரோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment