முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு ஆதரவாக வாதாடும் தினகரன் தரப்பு…!நாங்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என ஒருபோதும் சொன்னது கிடையாது!

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இன்று காலை விசாரணையை தொடங்கினார்.

இந்த விசாரணையில் டிடிவி தரப்பு வாதாடிய போது; 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் ஜக்கையனுக்கும் தங்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் , 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது; உள்நோக்கம் கொண்டது. மேலும் அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை.

நாங்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களிப்போம் என ஒருபோதும் சொன்னது கிடையாது. ஆட்சிக்கு எதிராக நாங்கள் செயல்படுகிறோம் என முதல்வர் கூறவில்லை. சபாநாயகர்தான் சொல்கிறார்.

தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மீது நடவடிக்கை இல்லை என்பதுதான் முதல் குற்றச்சாட்டு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்பது எங்களுக்கு இரண்டாவது பட்சம்தான் என்று டிடிவி தினகரன் சார்பில் வழக்கறிஞர் ராமன் வாதங்களை முன்வைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment