மீண்டும் தொடங்கியது ஸ்டெர்லைட் போராட்டம்… SFI ,DYFI ,AIDWA ,CITU மாவட்ட ஆட்சியரிடம் மனு..!!

தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்தில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிறுவனத்தால் அங்கே இருக்கும் மக்களின் சுற்றுசூழலை பாதிக்கும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் 100_வது நாளில் வன்முறையாக மாறி போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் தொடர்பாக விசாரணை நடத்தி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கோரி முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் குழுவை நியமித்து அந்த குழு ஆய்வறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது.அதில் ஸ்டெர்லைட் ஆலையை முடியாது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தருண் அகர்வாலின் ஆய்வறிக்கையின் ஏமாற்றத்தால் தூத்துக்குடி பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் , தருண் அகர்வால் நடத்திய ஆய்வறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்திய மாணவர் சங்கம் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் , இந்திய தொழிற்சங்க மையம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் சார்பில் திரளானோர் மனு கொடுக்க வந்தனர்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக முழங்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில செயலாளர் ரசல் , இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் இ.சுரேஷ் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் MS.முத்து , அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்க மாவட்ட செயலாளர் பூமயில் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா , பேச்சிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்..
DINASUVADU.COM
 
 
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment