மிசோரம் – ஒடிசா மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்..!!

ஹரியானா பாஜக தலைவர் கணேஷி லால் ஒடிசா ஆளுநராகவும் கேரள பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன் மிசோராம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பீகார் ஆளுநர் சத்யபால் மாலிக் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் ஒடிசாவின் புதிய ஆளுநராக கணேஷிலாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். கணேஷி லால் தற்போது பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் ஹரியானா பாஜக தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இதே போல் மிசோராம் ஆளுநர் நிர்பாய் ஷர்மாவின் பதவிக்காலம் வரும் 28ம் தேதியோடு முடிவடையும் நிலையில், கும்மனம் ராஜசேகரன் அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜசேகரன் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகாரராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர்.

தற்போது கேரள பாஜக தலைவராக இருக்கும் ராஜசேகரன், கேரளாவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புக்களை இந்து ஐக்கிய வேதி என்ற ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

author avatar
kavitha

Leave a Comment