மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி…!!

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.
அதை தொடர்ந்து புதிய அதிபராக இன்று அவர் பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா தலைநகர் மாலேவில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்துகிறார். அதற்காக இன்று அவர் மாலத்தீவு புறப்பட்டு சென்றார்.மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சாலிக் பதவியேற்கவுள்ளார்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment