மாரி 2 படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

இந்த வாரம் மட்டுமே தமிழ் சினிமாவில் இருந்து தனுஷின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, விஜய் சேதுபதி நடிப்பில் சீதகாதி என  ஐந்து படம் மற்றும் கே.ஜி.எஃப் எனும் டப்பிங் படம் என ஆறு படங்கள் வெளிவரவுள்ளன.
இதனால் படம் வெற்றியடைய பலத்த போட்டி எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில்  உருவாகியுள்ள மாரி 2 படத்தினை இணையதளத்தில் வெளியிட தடை கேட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்,  இணையத்தில் மாரி 2வை வெளியிட தடை விதித்துள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment