மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…!!

வாழ்வாதார கோரிக்கையை வீடியோ மூலம் பதிவிட்டு அனுப்பிய மாணவியின் தேவையை நிறைவேற்றிய, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் செல்போனுக்கு, கடந்த 13-ம் தேதி வாட்ஸ் அப் மூலமாக ஒரு வீடியோ வந்தது. அதில் செய்யாறைச் சேர்ந்த பள்ளி மாணவி ரூபிகா, தனது அப்பா வேலையின்றி தவித்து வருவதாகவும், தங்களது வாழ்வாதார தேவைக்காக சொந்தமாக ஆடுகள் வழங்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, பெற்றோரின் மீது மாணவி கொண்ட பாசத்தைக் கண்டு, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆடுகளை மாணவியின் வீட்டிற்கே சென்று வழங்கினார். மாணவியின் குடும்பத்திற்கு சொந்தமாக வீடு இல்லை என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர், அவர்கள் நிரந்தரமாக வசிக்க 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டி தரவும் ஏற்பாடு செய்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment