மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழக பல்கலைக் கழகங்களை எடுக்க முயற்சி? திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆவேசம் ….

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்துளளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெருமளவில் சொத்துகள் கொண்ட தமிழக பல்கலைக் கழகங்களை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை வரும் ஜூன் மாதம் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மாநில சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகங்களை தாரை வார்க்க திரைமறைவில் ரகசியமாக மத்திய பா.ஜ.க. அரசுடன் கைகோர்த்து மாநில அரசு செயல்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் கல்வியாளர்களின் சினத்தை கிளப்பியிருப்பதாக கூறியுள்ளார். இது, மாநில சுயாட்சி மீதும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் மீதும் நடத்தப்படும் அப்பட்டமான நேரடித் தாக்குதல் மட்டுமின்றி,அதிகாரக் குவியலின் மீதேறி பா.ஜ.க. அரசு கோர தாண்டவம் ஆட குறிவைத்திருப்பதைப் போல் தெரிவதாக மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment