மக்களே உஷார்..! வங்கி வட்டி விகிதங்கள் உயர வாய்ப்பு..!

ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்த வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 4 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தின் போது ரெப்பொ வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் அண்மையில் பணவீக்க விகிதம் அதிகரித்த நிலையில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு பொருளாதார நிபுணர்களிடம் ராய்ட்டர்ஸ் நிறுவனம் கடந்த வாரம் கருத்துக் கணிப்பு மேற்கொண்டது.

இதில் ஒரு பிரிவு பொருளாதார நிபுணர்கள் டிசம்பர் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்ந்து 6.50 சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்றொரு பிரிவு பொருளாதார நிபுணர்கள் ஆகஸ்ட் மாதத்திலேயே வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment