'' போலீஸ் மீதே FIR '' அசத்தலான மனித உரிமை பாதுகாப்பு சட்டம்….!!

மனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக இந்திய காவல்துறை அதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 2012- ஆம் ஆண்டு மட்டும் காவல்துறையினர் மீது 205 வழக்குகள் போடப்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டு 72 ஆகவும், 2010-ஆம் ஆண்டு 37 ஆகவும் இருந்ததாக ஆணையத்தின் பதிவுகள் குறிப்பிடுக்கின்றன.205 வழக்குகளில், வெறும் 19 காவல்துறை அதிகாரிகள் மீதே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.தலைநகர புது டெல்லியில் கூட மனித உரிமை மீறல் என்று காவல்துறையினர் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்தியாவில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 102 வழக்குகள் பதிவாகி அதிகபட்சமான  மனித உரிமை மீறல் நடந்ததாக காவல்துறை மீது வழக்குப்பதிவாகிள்ள மாநிலமாக இருந்து வருகின்றது.இதில் கைதிகளைச் சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக காவல்துறையினர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
DINASUVADU.COM

author avatar
Dinasuvadu desk

Leave a Comment