போர் நிறுத்தம் அறிவித்த பிறகும் ஆப்கானிஸ்தானில் சண்டை… 10 தலிபான்கள் கொலை..!

ஆப்கானிஸ்தானில்  ரம்ஜான் நோன்பை முன்னிட்டு தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போர் 5 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அதிபர் அஷ்ரப் கனி நேற்று அறிவித்தார். அதே சமயம், இன்ன பிற வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளான அல் கொய்தா மற்றும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் தொடர்ந்து நடைபெறும் என கூறியிருந்தார்.

இந்த போர்நிறுத்த அறிவிப்பை தலிபான்கள் தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்கர்  மாகாணத்தில் நடந்த சண்டையில் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த 10 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

நங்கார்கர் ஆபரேசன் முடிந்துவிட்டதாகவும், அதன்பின்னர் போர்நிறுத்தத்தை பின்பற்ற உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், தலிபான்கள் தாக்கினால் பதிலடி கொடுப்போம் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், நங்கார்கரில் உள்ள எம்.பி. ஒருவரின் வீட்டைக் குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment