போராட்டத்தில் ஈடுபட்ட 86 இஸ்லாமியர்களுக்கு…55 ஆண்டுகள் சிறை- 12,00000 அபராதம்

  • தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றத்திற்கு தெஹ்ரீக்-இ-லாபாய்க் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டம்
  • போராட்டத்தில் ஈடுபட்ட  86 இஸ்லாமியர்களுக்கு 59 ஆண்டுகள் சிறை மற்றும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானில் பெரும் சர்ச்சையாக வெடித்த தெய்வ நிந்தனை வழக்கில் இருந்து கிறிஸ்துவ பெண்ணை விடுவித்த நீதிமன்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 86 பேருக்கு தலா 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பாகிஸ்தாந் நாட்டில் உள்ள பஞ்சாபில் இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி, தெய்வ நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீபி என்கிற பெண் மீது வழக்குப் போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

Image result for tehreek e labbaik pakistan protest

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு கிறிஸ்துவரான ஆசிய பீபீக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டில் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்தது இந்த போராட்டத்தில் வன்முறை நிகழ்த்தியதாக தெஹ்ரீக்-இ-லாபாய்க் பாகிஸ்தான் கட்சியை சேர்ந்த 86 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்கில்  தீர்ப்பளித்துள்ள அந்நாடு  நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 86 பேர்களுக்கு தலா 55 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது மட்டுமல்லாமல் 12 லட்சம் அபராதமும் விதித்து உள்ளது.

author avatar
kavitha