பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க கோரிய வழக்கு …!வரும் 20ஆம் தேதி மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதாரை இணைக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வரும் 20ஆம் தேதி பதிலளிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதாரை இணைக்கவும், கணக்கு தொடங்க ஆதாரை கட்டாயமாக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சமூக வலைதள கணக்குகளுக்கு ஆதாரை கட்டாயமாக்க கோரிய வழக்கில், வரும் 20ல் பதிலளிக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் சமூக வலைதளங்கள் மூலம் தனிநபர்கள் துன்புறுத்தப்படுவது தொடர்பான புகார்களை கையாளுவது குறித்து வரும் 20-ல் நேரில் விளக்கமளிக்க சைபர் குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
மேலும் ஆபத்தான கோரிக்கை எனவும், இதனால் அந்தரங்க உரிமை பாதிக்கும் எனவும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். .
DINASUVADU

Leave a Comment